கடையம், ஏப்:
கடையம் அருகே உள்ள தாழையூத்து நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் துர்கா தேவி (வயது 16). கடந்த 16-ந் தேதி துர்காதேவி தனது தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாள். இதில் படுகாயம் அடைந்த அவளை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் துர்காதேவி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்சையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.