கோவில் வருசாபிஷேகம்
நெல்லை பழைய பேட்டை முப்பிடாதி அம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.
நெல்லை, ஏப்:
நெல்லை பழைய பேட்டை முப்பிடாதி அம்மன், சந்தன மாரியம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்து கொண்டனர்.