ஊரடங்கிலும் செயல்பட்ட அம்மா உணவகங்கள்

ஊரடங்கிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டன.

Update: 2021-04-25 20:15 GMT
திருச்சி,
ஊரடங்கையொட்டி திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களும் முழுமையாக செயல்பட்டன. ரெயில்கள், பஸ்கள் இயங்காததால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமானோர் திருச்சி ரெயில் நிலையத்திலும், பஸ் நிலையத்திலும் முடங்கி கிடந்தனர். இவர்கள் உணவுக்காக அம்மா உணவகங்களை நாடி சென்றனர். இவர்களை போல் முதியோர்களும், ஆதரவற்றோர்களும் அம்மா உணவகங்களில் சாப்பிட்டனர். திருச்சி மாநகரில் ஜங்ஷன், புத்தூர் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில், இப்ராகிம்பார்க் அருகில், இ.பி.ரோடு, உறையூர் உள்பட மொத்தம் 11 அம்மா உணவகங்களும் நேற்று செயல்பட்டன. காலை உணவாக இட்லி, தோசையும், மதியம் சாம்பார்சாதம், தயிர்சாதம் உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்பட்டன. இந்தநிலையில் முழு ஊரடங்கு நாளில் செயல்பட்டு வந்த அம்மா உணவகங்களில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்