ஆன்-லைன் மூலம் உணவு வினியோகம்

முழுஊரடங்கு காரணமாக ஆன்-லைன் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட்டன.

Update: 2021-04-25 20:15 GMT
திருச்சி,
கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி மாநகர பகுதிகளில் ஒரு சில பெரிய ஓட்டல்கள் மட்டும் திறந்து இருந்தன. அங்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதில் வயதானவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் பலர் உணவு ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையான உணவை வரவைத்து கொண்டனர். இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஆன்-லைன் உணவு வினியோகம் செய்யும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளுடன் ஓட்டல்கள் முன்பு தயார் நிலையில் இருந்தனர்.

மேலும் செய்திகள்