பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை

பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை

Update: 2021-04-25 19:57 GMT
கைதான வாலிபர் வாக்கு மூலம்
துடியலூர்,ஏப்.26-

கோவை துடியலூர் பகுதியில் வசித்தவர் 70 வயது மூதாட்டி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி  இவர் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம ஆசாமியால் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 2½ பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவையும் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தனிப்படை  போலீசார் ஆனைக் கட்டி பகுதியில் சந்தேகத்துக்கு  இடமான ஒரு வாலிபரை  பிடித்து விசாரித்தனர். 

அப்போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் சேவகம் பட்டியை சேர்ந்த  வினோத் என்ற கருப்பையா (25) என்பதும், அவர்  நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததும் தெரியவந்தது. 

மேலும் கொலை செய்யும் முன்பு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்