திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 1,326 பேர் மீது வழக்கு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று ஒரேநாளில் 1,326 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறி அவசியமின்றி சுற்றித்திரிபவர்கள், முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்தநிலையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற கடைகள் அடைக்கப்பட்டன.
இதற்கிடைேய மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி அவசியமின்றி வெளியே சுற்றித்திரிந்த 880 பேர் மீதும், முககவசம் அணியாத 392 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 54 பேர் மீதும் என நேற்று ஒரேநாளில் 1,326 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.