அம்மா குளம் பகுதியில் மர்மமாக இறக்கும் மயில்கள்
அம்மா குளம் பகுதியில் மர்மமாக இறக்கும் மயில்கள் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோகைமலை
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் சின்னரெட்டிபட்டி அருகே அம்மா குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையோரங்களில் அடர்த்தியான மரங்கள் இருந்து வருகிறது. இந்த மரங்களில் பல்வேறு வகையான பறவைகள் தங்கியுள்ளது. இதில் தேசிய மயில்களும் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மர்மமான முறையில் இறந்து கிடக்கிறது. எனவே உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்து கிடக்கும் மயில்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.