விவசாயி வைத்த கூண்டில் மரநாய் சிக்கியது
வேளாங்கண்ணி அருகே விவசாயி வைத்த கூண்டில் மரநாய் சிக்கியது
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே விவசாயி வைத்த கூண்டில் மரநாய் சிக்கியது.
காய்கறி சந்தை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பரவை தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளான தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், பிரதாபராமபுரம், வேளாங்கண்ணி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யும் காய்கறிகளை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கூண்டில் மரநாய் சிக்கியது
விளைநிலங்களில் எலி உள்ளிட்டவைகள் காய்கறிகளை தின்று சேதம்செய்து வருகின்றன. அவற்றைப்பிடிப்பதற்கு விவசாயிகள் கூண்டு வைத்திருந்தனர். விவசாயி ஒருவர் வைத்த கூண்டில் அரிய வகை விலங்கான மரநாய் சிக்கியது. .இது தென்னை மரங்களில் உள்ள தேங்காயை ஓட்டையிட்டு அதில் உள்ள நீரை குடித்து விடுகின்றது. இதனால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நாகை மாவட்ட வன பாதுகாவலர் கலாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரநாயை கைப்பற்றி வன பகுதியில் விட்டனர்.