கேத்தரின் நீர்வீழ்ச்சி அருகே பட்டப்பகலில் கரடி நடமாட்டம்

கேத்தரின் நீர்வீழ்ச்சி அருகே சாலையோரத்தில் பட்டப்பகலில் கரடி உலா வந்தது.

Update: 2021-04-25 14:55 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகாவில் அரவேனு அருகே உள்ளது, கேத்தரின் நீர்வீழ்ச்சி. இது அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. இங்கு கரடி, சிறுத்தைப்புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது. 

இந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால், கேத்தரின் நீர்வீழ்ச்சி அருகே சக்தி நகருக்கு செல்லும் சாலையோரத்தில் பட்டப்பகலில் கரடி உலா வந்தது. சற்று நேரம் அதே பகுதியில் சுற்றித்திரிந்த அந்த கரடி, அதன்பிறகு அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.

மேலும் செய்திகள்