பெரியகுளம் அருகே கிடப்பில் போடப்பட்ட கல்லாற்று சாலை பணி

பெரியகுளம் அருகே கல்லாற்று சாலை பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

Update: 2021-04-25 12:53 GMT
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் அழகர்சாமிபுரம் உள்ளது. இங்கு இருந்து கல்லாற்றுக்கு செல்வதற்காக கிராம சாலை உள்ளது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் இந்த சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக இருந்தது. 
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் கொட்டி பரப்பப்பட்டது. ஆனால் அதன்பின் பல மாதங்களாக சாலைப்பணி தொடங்காமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். 
சில நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் நிலை உள்ளது. எனவே நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை உடனடியாக தொடங்க நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்