செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,163 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,163 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,163 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 63 ஆயிரத்து 96 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 902 ஆக உயர்ந்தது. 8 ஆயிரத்து 708 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 363 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.
இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது. 2,639 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.