குடியாத்தத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி

குடியாத்தத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி

Update: 2021-04-25 12:17 GMT
குடியாத்தம்

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குடியாத்தம் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் ராஜேந்திர சிங் தெருவைச் சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நேற்று அவரது உடல் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை சுடுகாட்டில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்