காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தையல் தொழிலாளி சாவு

காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-04-25 11:59 GMT
காஞ்சீபுரம், 

காஞசீபுரம் நாகலூத்து மந்தவெளி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 48). தையல் தொழிலாளி. இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பக்கத்து தெருவில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கஜேந்திரனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்