2 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு

2 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-24 22:18 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மாத்தாயி தெருவை சேர்ந்த ராமரின் மகன் சசிகுமார்(வயது 31). இவரது சித்திகளான சுதா, செல்வராணி ஆகிய 2 பேரையும் அதே பகுதியை சேர்ந்த செம்மலைபாண்டியனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் செம்மலைபாண்டியனுடன் செல்வராணி குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி செல்வராணி, சசிகுமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சசிகுமார், அவரது மாமா குருநாதன் ஆகியோர் சென்று செம்மலைபாண்டியனை தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த செம்மலைபாண்டியன், அவரது மகன் ஹரிஹரசுதன் ஆகியோர் இரும்பு கம்பியால் சசிகுமார், குருநாதனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சசிகுமார், குருநாதன் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்