தென்காசியில் புதிதாக 160 பேருக்கு கொரோனா
தென்காசியில் புதிதாக நேற்று 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரி, நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி ஆயிரத்து 259 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 17-ந் தேதி 66 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்புடன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் கடந்த 22-ந் தேதி 81 வயது பெண் ஒருவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் நேற்று இறந்தார். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 171-ஆக அதிகரித்துள்ளது.