மணல் ஏற்றி வந்த மினி வேன் பறிமுதல்

அனுமதியின்றி மணல் ஏற்றி மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-24 19:23 GMT
தளவாய்புரம், 
சேத்தூர் ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோவில் சாலையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக சேத்தூர் வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலை வழியாக வந்த ஒரு மினி வேனை மறித்தனர். அப்போது வேனை ஓட்டி வந்த டிரைவர் வேனை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் அந்த வேனை பறிமுதல் செய்து சேத்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த வேனில் அனுமதியின்றி 2  யூனிட் ஆற்றுமணல் இருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்