பெண் ரெயில்வே கேட் கீப்பரை தாக்கி 5 பவுன் நகை, செல்போன் பறிப்பு

சோழவந்தான் அருகே பெண் ரெயில்வே கேட் கீப்பரை தாக்கி 5 பவுன் நகை, செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-24 18:48 GMT
சோழவந்தான்,ஏப்
சோழவந்தான் அருகே பெண் ரெயில்வே கேட் கீப்பரை தாக்கி 5 பவுன் நகை, செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண் ரெயில்வே கேட் கீப்பர்
சோழவந்தான் அருகே வடகரை கண்மாய்க்கு செல்லக்கூடிய பாதையில் வைகை ெரயில்வே கேட் உள்ளது. இங்கு சமயநல்லூரை சேர்ந்த செல்வி(வயது 34) என்ற பெண் தற்காலிக ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை 8 மணி முதல் செல்வி பணியில் இருந்தார். மதியம் 2.30 மணியளவில் 2 மர்ம நபர்கள் ஏதோ விசாரிப்பது போல ரெயில்வே கேட் கீப்பர் அறைக்கு வந்தனர்.
நகை, செல்போன் பறிப்பு
அப்போது திடீரென்று ஒரு ஆசாமி செல்வியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் அவர் பயத்தில் நடுங்கி விட்டார். அந்த நேரத்தில் மற்றொரு ஆசாமி செல்வியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டு வெளியே ஓடினார். பின்னர் அந்த ஆசாமிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து மதுரை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை
2 மர்ம ஆசாமிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். காட்டு பகுதியில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் பெண் ஒருவரை கேட் கீப்பராக பணி அமர்த்தியது குறித்து கேள்விக்குறி எழுந்து உள்ளது. அவருக்கு உதவியாளரும் இல்லை. சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை.

மேலும் செய்திகள்