ஊரடங்கால் மந்தமாக நடைபெற்ற மண்பானை விற்பனை
ஊரடங்கு காரணமாக மண்பானை விற்பனை மந்தமாக நடைபெற்றது.
வடகாடு, ஏப்.25-
ஊரடங்கு காரணமாக மண்பானை விற்பனை மந்தமாக நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமி
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று வீடுகள் தோறும் மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு நாளை (திங்கட்கிழமை) சித்ரா பவுர்ணமி கொண்டாடப்படுகிறது. இதன்காரணமாக மண்பானை விற்பனை நடைபெறும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் மண்பானைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
மந்தமான விற்பனை
ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மண்பானைகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மண்பானைகள் விற்பனை மந்தமாகவே நடைபெற்றது. இது குறித்து மண்பானை வியாபாரிகள் கூறியதாவது:-
ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி பொங்கல் பண்டிகை முதல்நாள் தான் அதிக அளவில் பொங்கல் பானைகள் விற்பனையாகும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு என்பதால் முன்னதாகவே மண்பானைகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம்.
ஆனால் விற்பனை சரிவர நடைபெறவில்லை. இதனால் மண்பானைகளை மீண்டும் வீட்டுக்கே எடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏற்கனவே வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு உதவ முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.