நச்சலூர்
நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.அப்போது இனுங்கூர் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்றபனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியில் உள்ள காசாகாலனியை சேர்ந்த திலக் (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் ஊராட்சி மாராய் பண்ணை களத்து பகுதியில் மது விற்று கொண்டிருந்த நெய்தலூர் காலனி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (35) என்பவரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.