வீடுபுகுந்து திருட முயற்சி

வீடுபுகுந்து திருட முயற்சி நடந்துள்ளது.

Update: 2021-04-24 16:43 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் ஆதம்நகரை சேர்ந்தவர் ஜொகான மேரி ஜுலி (வயது52). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் திடீரென்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எழுந்து சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் கழிப்பறை கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை திருட முயன்றது தெரிந்தது. அவரை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்