தர்மபுரிமாவட்டத்தில் 182 பேருக்கு கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் 182 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 182 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஹேப்பி நகர், நியூ காலனி மெயின் ரோடு, செட்டியார் தெரு ஆகிய பகுதிகளில் 15 பேர் உள்பட மாவட்டத்தில் 182 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரியாம்பட்டி ஊராட்சியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
898 பேர் பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 898 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 84 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 182 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 995 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 63 பேர் உயிரிழந்து உள்ளனர்.