சாமி கும்பிடுவதில் கோஷ்டி மோதல்
சாமி கும்பிடுவதில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
கமுதி,
கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது வேப்பங்குறிச்சி. இந்த ஊரில் கோவில் சாமி கும்பிடும் தகராறில் இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கம்பி, கம்புடன் தாக்கி கொண்டனர். இதில் முருகன் (வயது60), பூமி (50) ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.