சனி பிரதோஷ விழா

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது.

Update: 2021-04-24 15:47 GMT
கோவில்பட்டி, ஏப்:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 3.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தாபன கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினார்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்