பி.ஏ.பி. கால்வாய் கரையில் கொட்டப்படும் குப்பைகள்
பி.ஏ.பி. கால்வாய் கரையில் கொட்டப்படும் குப்பைகள்
உடுமலை
உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.வி.புரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு பி.ஏ.பி.கால்வாய் பாலத்தின் அருகில் கால்வாய்கரையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் குப்பைகள் சரிந்து கால்வாய் தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்படுகிறது. பி.ஏ.பி.கால்வாயில் தற்போது தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில் ஆங்காங்குள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கால்வாய் பகுதியில் உள்ள படிக்கட்டுகள் பகுதியில் குளித்தும், துணிகளை துவைத்தும் வருகின்றனர்.
அப்போது தண்ணீரில் அடித்து வரப்படும் குப்பைகள் அவர்கள் மீது படுகிறது. அதனால் அவர்கள் அறுவெறுப்படைகின்றனர். அத்துடன் பழைய துணிகள் போன்ற குப்பைகள் கிளைவாய்க்கால் பிரிந்து செல்லும் செட்டரில் சிக்கிக்கொள்கின்றன. இதேபோன்று மேலும் சில இடங்களில் பி.ஏ.பி.கால்வாய் கரை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் கால்வாய் தண்ணீருக்குள் விழுந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்படுகின்றன. அதனால் கால்வாய் கரைப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.