10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஜோலார்பேட்டை அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2021-04-24 13:52 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி அருகே கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் அருள் (வயது 56), விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. 

இன்று காலை இவரது நிலத்தில் திடீரென மலைப்பாம்பு படுத்து கொண்டு இருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் மலைப்பாம்பை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.

மேலும்  இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

பின்னர் வனத்துறையினர் மலைப்பாம்பை ஏலகிரி மலை காட்டில் விட்டனர்.

மேலும் செய்திகள்