போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி
ஆறுமுகநேரியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆறுமுகநேரி, ஏப்:
ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 34 வயது மதிக்கத்தக்க ஒரு போலீஸ்காரருக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் உள்ள 26 போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களில் வேறு எவருக்கும் தொற்று இல்லை.
இந்நிலையில் நேற்று ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 16 போலீசார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் மகராஜன், காயாமொழி சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.