மதுராந்தகம் அருகே 16 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் - கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தன

மதுராந்தகம் அருகே 16 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. அங்கு இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்தன.

Update: 2021-04-24 11:29 GMT
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை பைரவி தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. அங்கு நேற்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து மேலும் தீ வேகமாக பரவி அருகில் உள்ள குடிசைகள் மீது பரவியது. இதில் 16 குடிசைகள் தீக்கிரையானது.

மேலும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்துவிட்டனர்.

தகவலறிந்த மதுராந்தகம் உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், அச்சரப்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்