மதுராந்தகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைப்பு

மதுராந்தகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-04-24 11:02 GMT
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜி (வயது 40). சாராயம் விற்றதையடுத்து மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பிரேம்குமார் மற்றும் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார். 

அவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்றதாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அருள் மணிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் சுந்தரவதனனுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து அவர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ராஜியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் புழல் சிறையில் உள்ள அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்