இந்தி நடிகைக்கு கொரோனா

கொரோனா 2-வது அலையில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் சிக்கி உள்ளனர்.

Update: 2021-04-24 05:56 GMT
இந்த நிலையில் இந்தி நடிகை அர்ஷி கானுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் தமிழில் மல்லி மிஸ்து என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியில், த லாஸ்ட் எம்பரர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

அர்ஷிகானுக்கு சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அர்ஷிகான் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தனர். முடிவு தற்போதுதான் வந்துள்ளது. அதில் எனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். எனக்கு லேசான கொரோனா அறிகுறிகளும் இருந்தன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிகிச்சை எடுத்து வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்