கொங்கணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

Update: 2021-04-23 22:23 GMT
எடப்பாடி:
கொங்கணாபுரம் கச்சிராயன் குட்டை அருகே உள்ள ஆண்டிபட்டியான் காடு டிரான்ஸ்பார்மரில் கோரணம்பட்டி ஏரிக்காட்டை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் (வயது 36) பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்