மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-23 21:04 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,280 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,956 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 273 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், 5 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஆயிரத்து 3 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்