பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனை, கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றம்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனை, கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை:
பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டில் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இதுதவிர மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியும் தனியாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக பரவிய போது ஐகிரவுண்டு பழைய ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சிறப்பு வார்டாக மாற்றப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த மற்ற சிகிச்சை பிரிவுகள் அருகில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை டீன் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.