விஷம் தின்ற 2 குழந்தைகளின் தாய் சாவு
விஷம் தின்ற 2 குழந்தைகளின் தாய் உயிரிழந்தார்.
ஆவூர்
விராலிமலை தாலுகா நீர்பழனி ஊராட்சி காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மலர் (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மலர், எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை முத்துக்கருப்பன் மண்டையூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.