புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-04-23 19:48 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 957 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது மாவட்டத்தில் 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்