தீயணைப்புத்துறை சார்பில் முக கவசம் வினியோகம்

சிவகாசியில் தீயணைப்புத்துறை சார்பில் முக கவசம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2021-04-23 19:19 GMT
சிவகாசி, 
சிவகாசி பஸ் நிலையத்திற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ் நிலையத்தில் முககவசம் அணியாமல் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு முககவசங்களை இலவசமாக வழங்கினர். அத்துடன் முக கவசம் அணிவதன் நன்மைகள் குறித்து அவர்கள் விளக்கி கூறினர்.

மேலும் செய்திகள்