பஸ் பயணியிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

பஸ் பயணியிடம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.

Update: 2021-04-23 18:48 GMT
கரூர்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 56). இவர் சம்பவத்தன்று நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அந்த கரூர் திருக்காம்புலியூர் அருகே வந்தபோது கனகராஜ் பாக்கெட்டில்  வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசன் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்