தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் சிண்டிகேட் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 37). கூலி தொழிலாளியான இவருக்கு, கடந்த சில மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.