கோழிகள் திருடிய வாலிபர்கள் சிறையில் அடைப்பு
கோழிகள் திருடிய வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
க.பரமத்தி
க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதபட்டியை சேர்ந்தவர் உத்தமன் (வயது 55). இவரது தனது தோட்டத்தில் அடைத்து வைத்திருந்த கோழிகளை கரூர் பஞ்சமாதேவி வடக்கு தெருவை சேர்ந்த தினகரன் (24), அவரது நண்பர் சஞ்சய் (19) ஆகியோர் சேர்ந்து திருடினர். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விாசரித்தபோது தப்பியோடி விட்டனர். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக க.பரமத்தி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தினகரன், சஞ்சய் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே கரூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.