ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-23 16:27 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். 

மாவட்டம் முழுவதிலும்‌ 1,004 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 585 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
----

மேலும் செய்திகள்