சாியான நேரத்திற்கு பணிக்கு வராததை கண்டித்து நகராட்சி மருத்துவமனை டாக்டருடன் பொதுமக்கள் வாக்குவாதம் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

டாக்டருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

Update: 2021-04-23 16:03 GMT
நெல்லிக்குப்பம், 
நெல்லிக்குப்பத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனைக்கு தினசாி நூற்றுக்கணக்கானோா் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடக்கிறது. கடந்த சில நாட்களாக மருத்துவமனைக்கு டாக்டா், சாியான நேரத்திற்கு வருவதில்லை என தொிகிறது. மேலும் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை என கூறப்படுகிறது. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை நெல்லிக்குப்பம் நகர வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி மருத்துவமனைக்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கு டாக்டர் பணியில் இல்லை. அவா் அருகில் உள்ள கட்டிடத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கிருபாகரனுடன் பேசிக் கொண்டிருந்தாா். இதுபற்றி அறிந்த பொதுமக்கள், கமிஷனர் (பொறுப்பு) கிருபாகரனிடம், டாக்டாின் செயல்பாடுகள் குறித்து கூறி முறையிட்டனா். அப்போது, பொதுமக்களுக்கும் டாக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கமிஷனர் கிருபாகரன், இதுதொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினாா். அப்போது பொதுமக்கள், இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனையை பூட்டி, சாலை மறியலில் ஈடுபடுவோம் என கூறி விட்டு கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்