கயத்தாறில் முககவசம் அணியாத 10 பேருக்கு அபராதம்

கயத்தாறில் முககவசம் அணியாத 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-23 15:56 GMT
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சி பகுதியில் நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் வாசமுத்து, சுகாதார மேற்பார்வையாளர் செல்லத்துரை, பேரூராட்சி சுகாதார பணியாளர்கள், பரப்புரையாளர்கள் முத்துலட்சுமி, குருலட்சுமியாத்தா, இலங்காத்தாள் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கயத்தாறு புதிய பஸ்நிலையம், கடம்பூர் ரோடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இரு சக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ, பஸ் மற்றும் இதர வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்த 10 பேருக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்