வேன் தீப்பிடித்து எரிந்தது

வெள்ளகோவில் அருகே வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு எரிந்து நாசம் ஆனது.

Update: 2021-04-23 12:39 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு எரிந்து நாசம் ஆனது.
வேன் தீப்பிடித்து எரிந்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து ஒரு வேன் 4 டன் தேங்காய் பருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு காங்கேயத்துக்கு வந்து கொண்டிருந்தது. இந்த வேனை குமார் வயது 42 என்பவர் ஓட்டினார். வேன் டிரைவர் இருக்கை அருகே கிளீனர் அருண்பாண்டி25 அமர்ந்திருந்தார்.
இவர்களது வேன் வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக என்ஜினில் இருந்து புகை வந்தது. இதனால் வேனை சாலையோரமாக குமார் நிறுத்தினார். அதற்குள் வேன் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் வேனில் கொண்டு வரப்பட்ட தேங்காய் பருப்பும் எரிந்தது.
தேங்காய் பருப்பு நாசம் 
 இதையடுத்து வௌ்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகர் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 
இந்த தீ விபத்தில் டிரைவர் குமார், கிளீனர் அருண்பாண்டி ஆகியோர் எவ்வித காயமின்றி தப்பினர். இந்த தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு பாரம் எரிந்து நாசம் ஆனது. 
----------

மேலும் செய்திகள்