செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு வெளிமாநில தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்த குறைகளை வெளிமாநில தொழிலாளர்கள் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

Update: 2021-04-23 11:36 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிகிறார்கள்.

கொரோனா தொற்று சமீப காலத்தில் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் பணி நிலைமைகள் மற்றும் குறைகள் ஏதும் இருப்பின் அதனை உடனடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்புக்கு-044-22502907, 7373278203 கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்புக்கு-044- 22501133, 9488402482 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்புக்கு.044-27237010,9445398743 எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்