கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

கடையநல்லூரில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2021-04-22 22:21 GMT
கடையநல்லூர்:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பேரில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டா் விஜயகுமார் ஆகியோர் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கொரோனா பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், முககவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார்கள்.

மேலும் செய்திகள்