ராகுல் குணமடைய வேண்டி காங்கிரசார் சிறப்பு வழிபாடு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராகுல்காந்தி குணமடைய வேண்டி காங்கிரசார் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தென்காசி:
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பூரண நலம் பெற வேண்டி, தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமையில், சிறப்பு பூஜை நடந்தது. வட்டார தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.