தி.மு.க. முகவர்களுக்கு பயிற்சி

கடையநல்லூரில் தி.மு.க. முகவர்களுக்கு பயிற்சி நடந்தது.

Update: 2021-04-22 22:02 GMT
அச்சன்புதூர்:
வருகிற 2-ந்தேதி வாக்கு எண்ணும் பணியில் கலந்து கொள்ளும் தி.மு.க. முகவர்களுக்கான பயிற்சி முகாம், கடையநல்லூர் தனியார் மண்டபத்தில் நடந்தது. தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். வக்கீல் இளங்கோ காெணாலிக்காட்சி மூலம் பயிற்சி அளித்தார்.

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கர், வாசுதேவநல்லூர் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைகுமார், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, கடையநல்லூர் நகர செயலாளர் சேகனா, செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வாக்கு எண்ணும் பணியில் கலந்து கொள்ளும் முகவர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்