ரெயில் மோதி தொழிலாளி பலி
ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில்,
ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீசில் கூறியதாவது:-
தண்டவாளத்தில் பிணம்
நாகர்கோவில் பள்ளிவிளை டவுன் ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாள பகுதியில் நேற்று காலை ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அதை கண்ட அப்பகுதி மக்கள், நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை
அப்போது பிணமாக கிடந்தவர் அருகுவிளை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த அனிஷ் பிரான்சிஸ் (வயது 24) என்றும், அவர் பள்ளிவிளை குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அனிஷ் பிரான்சிஸ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.