மேலும் 17 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-22 20:18 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் 10 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 4 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் ஒருவருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 17 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,440 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,343 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 74 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 844 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் வர வேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 30,234 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்