உடுமலையில் கொய்யாவை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
உடுமலையில் கொய்யாவை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலையில் கொய்யாவை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் அவ்வப்போது மேகமூட்டம், மழை ஆகிய பருவநிலைகள் மாறி மாறி வரும் தற்போதைய சூழல் வெள்ளை ஈக்களின் இனப் பெருக்கத்துக்கு உகந்த சூழலாக உள்ளது. இதனால் வெள்ளை ஈக்களின் வளர்ச்சி வேகமெடுத்து வரும் நிலையில் விவசாயிகள் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வேளாண்துறையினர் கூறினர். இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-
சுருள் வெள்ளை ஈக்கள் தென்னை மரங்களை மட்டுமல்லாமல் பாக்கு, கொய்யா, வாழை, எலுமிச்சை, கரும்பு போன்றவற்றையும் காய்கறிப் பயிர்களையும் தாக்கக் கூடியதாகும்.தென்னை மரங்களிலுள்ள ஓலைகளின் அடிப்பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் வெள்ளை ஈக்கள் அதன் பச்சையத்தை தின்று விடுவதுடன் கரும்பூஞ்சணத்தையும் உருவாக்குகிறது. இதனால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது.வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த கண்டிப்பாக ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.
இயற்கை எதிரிகள்
ஓலைகளின் அடிப்பாகத்தில் படுமாறு தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் அதன் முட்டைகள், குஞ்சுகளையும் அழிக்க முடியும். மேலும் இயற்கை முறையில் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஓட்டும் பொறிகளை ஏக்கருக்கு 8 என்ற விகிதத்தில் கட்ட வேண்டும். தற்போது உடுமலை பகுதியில் கொய்யா மரங்களில் இந்த மஞ்சள் நிற ஓட்டும் பொறிகளைக் கட்டுவதன் மூலம் விவசாயிகள் பெருமளவு வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதுதவிர வெள்ளை ஈயின் இயற்கை எதிரியான என்கார்சியா ஒட்டுண்ணி வளர்வதற்கான சூழலை தோப்புகளில் உருவாக்க வேண்டும்.களை கொல்லிகள் தெளிப்பதன் மூலம் இந்த இயற்கை எதிரிகள் முற்றிலுமாக அளிக்கப்படுவதே தற்போதுள்ள வெள்ளை ஈக்களின் அதிவேகமான வளர்ச்சிக்குக் காரணமாகும். எனவே தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் இயற்கை எதிரிகள் வளரும் சூழலை உருவாக்கலாம்.
ஓட்டுண்ணிகள்
மேலும் ஏக்கருக்கு 100 என்ற எண்ணிக்கையில் முட்டை ஒட்டுண்ணிகளை விடலாம்.காய்கறிப் பயிர்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே வேம்பு எண்ணெய்க் கலவையை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்'என்று அவர்கள் கூறினர்.