அம்மன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி திருட்டு

கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

Update: 2021-04-22 19:02 GMT
சத்திரப்பட்டி: 

ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி அருகே 16 புதூர் ஊராட்சியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் காளிமுத்து. நேற்று மாலை இவர், கோவிலை சுத்தம் செய்வதற்காக அங்கு சென்றார்.

அப்போது கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, காளியம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உண்டியலில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்.

 இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு காளிமுத்து தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். 

அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம், 16 புதூர் ஊராட்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்